ADDED : ஜன 19, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வான்ரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (எ) ஞானசேகர், 32. இவர் நேற்று மதியம் குடித்து விட்டு, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில், பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ஒதியஞ்சாலை போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

