/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
/
மின் வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
ADDED : ஜூன் 25, 2025 07:59 AM
பாகூர் : பாகூரில் மின் வெட்டு பிரச்னையை கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், நேற்று முன்தினம் இரவு ராந்தல், மெழுகு வர்த்தி, தீப்பந்தம் ஏந்தி நுாதன போாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னையை சரி செய்திட வேண்டி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இருப்பினும், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது. இதனை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்று, பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல மாதங்களாக நீடித்து வரும் மின் தடை பிரச்னையை உடனடியாக சரி செய்திட கோரியும், மின் துறையை கண்டித்து, ராந்தல், மெழுகு வர்த்திகள், தீப்பந்தம் ஏற்றி ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தி.மு.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.