/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : பிப் 01, 2024 11:34 PM

புதுச்சேரி: புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷ விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, நேருவீதி - பாரதி வீதி சந்திப்பில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிேஷக விழா, கடந்த 27ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.
28ம் தேதி, கோ பூஜை, தன பூஜை, தீபாராதனை நடந்தது. 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, அன்றைய தினம் மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு, சக்தி கணபதி பூஜை, நாடி சந்தானம், காலை 8:00 மணிக்கு மகா தீபாராதனை, யாத்ரா தானம் கலச புறப்பாடு நடந்தது.
காலை 8:40 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், ராஜகோபுரம் மற்றும் வரசித்தி விநாயகர் மூலவருக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

