தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 21, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் வாக்காளர் விழிப்புணர்வு, இருசக்கர வாகன ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையடுத்து, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தேர்தல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை கடற்கரை சாலையில் நேற்று காலை நடத்தின.

மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ராஜ்பவன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ் ரீஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி ஸ்டிக்கர் வெளியிடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கடற்கரை சாலையில் இருந்து துவங்கிய ஊர்வலம், புஸ்சி வீதி, காமராஜ் சாலை, வழுதாவூர் சாலை வழியாக சென்று கதிர்காமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us