தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு


ADDED : மார் 21, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் சுதந்திரமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதற்காக பல்வேறு கண்காணிப்பு மற்றும் அமலாக்கக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுப்பார்வையாளர் ஹர்ஷிகா சிங், காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதி களையும், பொதுப்பார்வையாளர் சரிதா பால ஓம் பிரஜாபதி திருப்பட்டினம் தொகுதியையும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து காரைக்கால் மேட்டில் உள்ள ராமசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஓட்டுச் சாவடிகளையும் பார்வையிட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'தேர்தல் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான சூழ லில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் எந்தவித அச்சமோ தயக்கமோ இன்றி தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தலாம். தேர்தல் தொடர்பான புகார்கள் உடனே தெரிவிக்கவும்' என்றனர்.

ஆய்வின் போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூஜா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us