/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் வரும் 15ம் தேதி ஓட்டுப் பதிவு
/
புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் வரும் 15ம் தேதி ஓட்டுப் பதிவு
புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் வரும் 15ம் தேதி ஓட்டுப் பதிவு
புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் வரும் 15ம் தேதி ஓட்டுப் பதிவு
ADDED : ஜன 23, 2024 04:59 AM

புதுச்சேரி : புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
புதுச்சேரி வக்கீல் சங்க தலைவர் குமரன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் அதிகாரியாக சீனியர் வக்கீல் சிரில் மத்தியாஸ் வின்சன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் அதிகாரிகளாக யோகானந்தன், ஸ்ரீனிவாசன், மரி அன்னா தயாவதி, வினோபா, அண்ணாமலை, அனுராதா, முரளி பாலகிருஷ்ணன், காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் துவங்கியது.
வேட்பு மனு தாக்கல் கடந்த 18ம் தேதி துவங்கியது. அஷ்டமி, நவமி வந்ததால் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் மந்தமாக இருந்தது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். கடைசி நாளான நேற்று மனு தாக்கல் களை கட்டியது. மாலை 5:00 மணியுடன் மனு தாக்கல் முடிந்தது.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், 5 இணைச் செயலாளர், 10 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். துணைத் தலைவர் பதவியும், ஒரு இணைச் செயலாளர் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர் பதவிகளும் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19 பதவிகளுக்கு 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான ஆய்வு இன்று நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (24ம் தேதி) கடைசி நாளாகும். போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
பிப்ரவரி 15ம் தேதியன்று ஓட்டுப் பதிவு நடக்கிறது. மறுநாள், ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

