/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவியை குளவி கொட்டிய விவகாரம்; போலீசில் புகார்
/
மாணவியை குளவி கொட்டிய விவகாரம்; போலீசில் புகார்
ADDED : ஜன 14, 2024 04:27 AM
பாகூர் :
குளவி கொட்டிய மாணவியை, முதலுதவி சிகிச்சைக்கு அழைத்து செல்லாத விவகாரம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகூர், கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 10ம் தேதி, 8ம் வகுப்பு மாணவியை குளவி கொட்டியது. அந்த மாணவிக்கு, ஆசிரியர் சுண்ணாம்பு தடவி அமர வைத்தார்.
பின், மாணவி பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மாணவியின் தாய், அவரது உறவினர் ஒருவரும், பள்ளி துணை முதல்வரிடம், மாணவியை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லாதது குறித்து கேட்டனர்.
அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே மாணவியின் தாய், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும், தரக்குறைவாக பேசிய ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல், பள்ளி நிர்வாகம் தரப்பில், அத்துமீறி புகுந்து ஆசிரியர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, மாணவிகளை பதட்டமடைய செய்ததாக, மாணவியின் உறவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

