/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை
/
நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை
ADDED : ஜன 10, 2024 01:46 AM
அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்களை கொன்ற சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்களுக்கு உணவு கொடுத்த பொதுமக்கள் அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்களை காணவில்லை என, கூறிவந்தனர். இந்நிலையில், மரப்பாலம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே தெரு நாய்கள் பல இறந்து கிடந்தன. சில இடங்களில் நாய்களை கொன்று புதைக்கப்பட்டும், சில நாய்கள் சாக்கு மூட்டைகளிலும், சில நாய்கள் அட்டை பெட்டிகளில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன.
நாய்களின் உடல்கள் அழுகிய நிலையில், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவலறிந்த தெரு நாய்களை வளர்த்த முதலியார்பேட்டையை சேர்ந்த ஒருவர் நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதில், நாய்களை கொடூரமாக கொன்று, சாக்குபைகள், அட்டைபெட்டிகளில் வைத்து வீசியுள்ளனர். சில நாய்களை கொன்று புதைத்தள்ளனர். இச்சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

