/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?
/
கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?
கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?
கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?
ADDED : பிப் 01, 2024 11:22 PM

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கத்தில் டாக்டர்கள் குடியிருப்பு பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏம்பலம் தொகுதியில் உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் சமுதாய நல மையம் அமைந்துள்ளது.
இங்கு, கரிக்கலாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்காக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், கரிக்கலாம்பாக்கம் சமுதாய மையம் அருகே இரண்டு கட்டடங்களாக குடியிருப்பு கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.
சில ஆண்டுகளிலேயே போதிய பராமரிப்பு இல்லாததால், மழை காலத்தில் கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்து மழை நீர் கசிய துவங்கியது. மேலும், கட்டடமும் பல இடங்களில் பழுதடைந்து இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால், குடியிருந்த டாக்டர்களும், செவியர்கள் மற்றும் ஊழியர்களும், குடியிருப்பை காலி செய்து விட்டனர். ஓரிருவர் மட்டுமே பெயருக்கு தங்கி உள்ளனர்.
தற்போது டாக்டர்கள் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது.
இரவு நேரத்தில் மது அருந்துவது, விபசாரம் உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை, போலீசாரும் கண்டு கொள்வதில்லை.
குடியிருப்பில் டாக்டர்கள் தங்க தயங்குவதால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை, தொகுதியின் எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தனும் கண்டு கொள்வதில்லை. இதனால், தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

