ADDED : செப் 20, 2024 03:34 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: சோரப்பட்டில் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யனார், 57; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு, மங்கலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக அய்யனார் கடந்த 2ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





