ADDED : ஜன 23, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி, புதுச்சேரியில் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நிகழ்ச்சியையொட்டி, வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் நேற்று மாலை அகல் விளக்குகள் ஏற்றினர்.
மேலும், ஒவ்வொரு வீடுகளில் 5 அகல் விளக்குகள் வீட்டு வாசல் முன்பு ஏற்றினர். பின்னர் ஜெய் ஸ்ரீராம் என கூறி மக்கள் வழிபட்டனர்.
பொதுமக்கள் வீடுகளில் வாசல் முன்பு அகல் விளக்குகள் ஏற்றியது, கார்த்திகை மாத தீபம் அன்று விளக்கு எரிந்தது போல காட்சி தந்தது. அதே போன்று, பல கடைகளிலும், அகல் விளக்குகள் ஏற்றி வியாபாரிகள் வழிபட்டனர்.

