ADDED : பிப் 25, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில், கமாண்டோ பணிக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
இதில், புதுச்சேரி போலீசில் பணிபுரியும் 45 பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் காவலர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

