/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * இந்தோனேஷிய பாட்மின்டன் துவக்கம்
/
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * இந்தோனேஷிய பாட்மின்டன் துவக்கம்
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * இந்தோனேஷிய பாட்மின்டன் துவக்கம்
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * இந்தோனேஷிய பாட்மின்டன் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 10:50 PM

ஜகார்த்தா: பாட்மின்டனின் தாயகம் என போற்றப்படும் இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்கள் இரட்டையரில் இந்தியா சார்பில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகிறது.
கடந்த 2023ல் இங்கு சாம்பியன் ஆன இந்திய ஜோடி, சமீபத்திய சிங்கப்பூர் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியது. இம்முறை இந்தோனேஷியாவின் லியோ ராலி, பாகஸ் மவுலானா ஜோடியை முதல் சுற்றில் எதிர் கொள்கிறது.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 29, பங்கேற்கிறார். கடந்த ஆண்டு தொடை பின்பகுதி காயத்தில் இருந்து மீண்டு வந்த பின், பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாவது சுற்றில் சிந்து தோல்வியடைந்தார். தற்போது புதிய பயிற்சியாளர் இந்தோனேஷியாவின் இர்வான்ஸ்யா ஆதி பிரதமா, சிந்து வெற்றிக்கு கைகொடுப்பார் என நம்பலாம். தவிர அனுபமா, ரக்சித்தா ஸ்ரீ, மாளவிகாவும் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் ஒற்றையரில் பிரனாய், காயத்தில் இருந்து மீண்ட லக்சயா சென் வெற்றிக்கு முயற்சிக்கலாம். பெண்கள் இரட்டையரில் திரீஷா, காயத்ரி ஜோடி மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.