/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம்
/
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம்
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம்
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்: சரித் அசலங்கா சதம்
ADDED : ஜூலை 02, 2025 10:37 PM

கொழும்பு: முதல் ஒருநாள் போட்டியில் சரித் அசலங்கா சதம் விளாச இலங்கை அணி 77 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கொழும்புவில் முதல் போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (0), நிஷான் மதுஷ்கா (6), கமிந்து மெண்டிஸ் (0) ஏமாற்றினர். பின் இணைந்த குசால் மெண்டிஸ், கேப்டன் சரித் அசலங்கா ஜோடி கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது குசால் மெண்டிஸ் (45) அவுட்டானார். ஜனித் லியானகே (29), மிலன் ரத்னாயகே (22), வணிந்து ஹசரங்கா (22) ஆறுதல் தந்தனர். மறுமுனையில் அசத்திய அசலங்கா, ஒருநாள் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இவர், 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 49.2 ஓவரில் 244 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அசிதா பெர்ணான்டோ (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் டாஸ்கின் அகமது 4, தன்ஜிம் ஹசன் சாகிப் 3 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (62), ஜாகர் அலி (51) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (23) ஆறுதல் தந்தார். லிட்டன் தாஸ் (0), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர்.
வங்கதேச அணி 35.5 ஓவரில் 167 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் வணிந்து ஹசரங்கா 4, கமிந்த மெண்டிஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.