/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
8 மாதம் டூ 10 ஆண்டு... * என்ன சொல்கிறார் பும்ரா
/
8 மாதம் டூ 10 ஆண்டு... * என்ன சொல்கிறார் பும்ரா
ADDED : ஜூன் 23, 2025 11:46 PM

லீட்ஸ்: ''கிரிக்கெட்டில் 8 மாதம் தான் நீடிப்பேன் என்றனர். இப்போது 10 ஆண்டுகளை நெருங்கி விட்டேன்,'' என பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. கடந்த 2016ல் சர்வதேச கிரிக்கெட்டில் (ஒருநாள்) அறிமுகம் ஆனார். இதுவரை 45 டெஸ்ட் (210), 89 ஒருநாள் (149), 70 'டி-20' (89) என மொத்தம் 448 விக்கெட் சாய்த்துள்ளார்.
இங்கிலாந்தில் நடக்கும் லீட்ஸ் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். இதுகுறித்து பும்ரா கூறியது:
கிரிக்கெட்டில் களமிறங்கிய நாள் முதல், இப்போது வரையிலும் என, 'நான் 8 அல்லது 10 மாதம் தான் விளையாடுவேன்,' என்றனர் சிலர். இப்போது சர்வதேச அரங்கில் 10 ஆண்டுகளை நெருங்கி விட்டேன்.
ஆனால் ஒவ்வொரு முறை காயம் அடையும் போதும், இனிமேல் வரமாட்டார் என்கின்றனர். அவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நான், எனது வேலையை பார்க்கிறேன். ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ஒருமுறை காயம் ஏற்படலாம். என்னால் முடிந்த வரை மீண்டு வருகிறேன். கடவுள் விரும்பும் வரை விளையாடுவேன். இது எவ்வளவு நாள் என்பதை அவரிடமே விட்டுவிடுகிறேன்.
மற்றபடி என்னைப்பற்றி என்ன எழுதுகின்றனர் என்பது எனது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.