/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * சதம் விளாசிய ஹர்வன்ஷ்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * சதம் விளாசிய ஹர்வன்ஷ்
இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * சதம் விளாசிய ஹர்வன்ஷ்
இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * சதம் விளாசிய ஹர்வன்ஷ்
ADDED : ஜூன் 25, 2025 10:56 PM

லோபரோ: இங்கிலாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் (ஜூன் 27-ஜூலை 7) பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், யங் லயன்ஸ் (இங்கிலாந்து) அணிக்கு எதிராக 50 ஓவர் பயிற்சி போட்டியில் பங்கேற்றது.
'டாஸ்' வென்ற யங் லயன்ஸ் அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (1), வைபவ் (17) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. விஹான் (39), மவுல்யராஜ்சின் (23) நிலைக்கவில்லை. பின் வந்த ராகுல் குமார் (73), கனிஷ்க் (79), அம்ப்ரிஸ் (72) சிக்சர் மழை பொழிந்தனர். 9வது வீரராக வந்த ஹர்வன்ஷ் 52 பந்தில் 103 ரன் குவித்தார். இந்திய அணி 50 ஓவரில் 442/9 ரன் குவித்தது.
யங் லயன்ஸ் அணிக்கு வில் பென்னிசன் (103) சதம் விளாசி உதவினார். ஓவன் ஸ்மித் (28), மான்னி (25), ஹாக்கின்ஸ் (15) தவிர மற்ற வீரர்கள் ஏமாற்றினர். யங் லயன்ஸ் அணி 41.1 ஓவரில் 211 ரன்னுக்கு சுருண்டது. இளம் இந்திய அணி 231 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீபேஷ் 3, நமன் 2, விஹான் 2 விக்கெட் சாய்த்தனர்.