sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

லீட்ஸ் டெஸ்ட்: அட்கின்சன் சந்தேகம்

/

லீட்ஸ் டெஸ்ட்: அட்கின்சன் சந்தேகம்

லீட்ஸ் டெஸ்ட்: அட்கின்சன் சந்தேகம்

லீட்ஸ் டெஸ்ட்: அட்கின்சன் சந்தேகம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் காயம் காரணமாக இங்கிலாந்தின் அட்கின்சன் பங்கேற்பது சந்தேகம்.

இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூன் 20ல், முதல் டெஸ்ட் லீட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31 - ஆக. 4) நடக்கவுள்ளன.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் 27, காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம். கடந்த மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இவரது, வலது கால் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இவரது காயம் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் என்பதால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு குறைவு.

ஏற்கனவே மார்க் உட், ஸ்டோன், ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அட்கின்சனும் விலகினால் இங்கிலாந்து அணிக்கு சிக்கலாகிவிடும்.




    • Dinamalar Events


    Dinamalar