/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்
/
தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்
தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்
தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூன் 15, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறியது.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற தென் ஆப்ரிக்க அணி, 114 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய அணி (123 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து அணி (113) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 105 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது.