/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை அணி பவுலர்கள் அசத்தல்: வங்கதேச அணி தடுமாற்றம்
/
இலங்கை அணி பவுலர்கள் அசத்தல்: வங்கதேச அணி தடுமாற்றம்
இலங்கை அணி பவுலர்கள் அசத்தல்: வங்கதேச அணி தடுமாற்றம்
இலங்கை அணி பவுலர்கள் அசத்தல்: வங்கதேச அணி தடுமாற்றம்
ADDED : ஜூன் 25, 2025 10:20 PM

கொழும்பு: இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. கொழும்புவில் 2வது டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு அனாமுல் ஹக் (0) ஏமாற்றினார். மோமினுல் ஹக் (21) நிலைக்கவில்லை. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (8) சொற்ப ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் (46) ஓரளவு கைகொடுத்தார். வங்கதேச அணி 90/4 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
மழை நின்ற பின் நிதானமாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் (35), லிட்டன் தாஸ் (34), மெஹிதி ஹசன் மிராஸ் (31), நயீம் ஹசன் (25) ஆறுதல் தந்தனர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. தைஜுல் (9), எபாடாட் ஹொசைன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அசிதா பெர்ணான்டோ, விஷ்வா பெர்ணான்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.