/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திருப்பூர் கலக்கல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
/
திருப்பூர் கலக்கல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
UPDATED : ஜூன் 22, 2025 11:16 PM
ADDED : ஜூன் 22, 2025 12:05 AM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது.
நெல்லையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் லீக் போட்டியில் திருப்பூர், மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. சரத் குமார் (31), ராஜலிங்கம் (22) ஆறுதல் தந்தனர். கேப்டன் சதுர்வேத் (10), கணேஷ் (10), முருகன் அஷ்வின் (13) நிலைக்கவில்லை. மதுரை அணி 20 ஓவரில், 120 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. குர்ஜப்னீத் சிங் (13) அவுட்டாகாமல் இருந்தார். திருப்பூர் அணி சார்பில் சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ரஹேஜா (40) அவுட்டானார். அபாரமாக ஆடிய அமித் சாத்விக் அரைசதம் விளாசினர். சூர்யா ஆனந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அமித் சாத்விக் வெற்றியை உறுதி செய்தார்.
திருப்பூர் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அமித் சாத்விக் (71), கேப்டன் சாய் கிஷோர் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.