/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
உலக கால்பந்து: நியூசிலாந்து தகுதி
/
உலக கால்பந்து: நியூசிலாந்து தகுதி
ADDED : மார் 24, 2025 10:41 PM

ஆக்லாந்து: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க, நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. இதற்கான தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. இம்முறை 6 கண்டங்களில் இருந்து மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான ஓசியானியன் பிரிவு தகுதிச்சுற்றில் 11 அணிகள் பங்கேற்றன.
மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று பைனல் ஆக்லாந்தில் நடந்தது. நியூசிலாந்து, நியூ கேல்டோனியா அணிகள் மோதின. பாக்ஸ்ஆல் (61), பார்பரவுசஸ் (66), ஜஸ்ட் (80) தலா ஒரு கோல் அடிக்க நியூசிலாந்து அணி 3-0 என வெற்றி பெற்றது. இதையடுத்து ஓசியானியன் பிரிவில் இருந்து, 2026 உலக கோப்பை தொடரில் பங்கேற்க, நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
மூன்றாவது முறை
உலக கோப்பை கால்பந்து தொடரில் நியூசிலாந்து அணி மூன்றாவது முறையாக (2026) பங்கேற்க உள்ளது. முன்னதாக, 1982ல் 3 லீக் சுற்றிலும் தோற்று 24 வது இடம் பெற்றது. 2010 ல் லீக் சுற்றில் 3 போட்டியிலும் 'டிரா' செய்ய, 22 வது இடம் பிடித்தது.