/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
/
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
ADDED : செப் 25, 2025 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: புட்சல் கால்பந்து தகுதிச் சுற்று ே பாட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை வீழ்த்தியது.
ஆசிய கோப்பை புட்சல் (ஐவர் கால்பந்து) தொடர் 2026, ஜன. 27-பிப். 7ல் இந்தோனேஷியாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று குவைத்தில் நடக்கிறது. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது.
முதல் இரு போட்டியில் குவைத் (1-4), ஆஸ்திரேலியாவிடம் (1-10) தோல்வியடைந்தது. மூன்றாவது, கடைசி போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த 2023 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் இந்திய புட்சல் அணி, பெற்ற முதல் வெற்றி இது ஆனது. பட்டியலில் 3 வது இடம் பிடித்து வெளியேறியது.