/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டில்லியை வென்றது பெங்கால்: புரோ கபடி லீக் போட்டியில்
/
டில்லியை வென்றது பெங்கால்: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியை வென்றது பெங்கால்: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியை வென்றது பெங்கால்: புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : பிப் 02, 2024 10:23 PM

டில்லி: புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணி 45-38 என டில்லியை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், டில்லி அணிகள் மோதின.
முதலில் 'ரெய்டு' சென்ற பெங்கால் அணியின் மனிந்தர் சிங், டில்லியின் விஷால் பரத்வாஜ், மோகித்தை அவுட்டாக்கினார். பெங்கால் வீரர் நிதின் குமாரை மடக்கிய யோகேஷ், டில்லி அணிக்கு முதல் புள்ளி பெற்றுத்தந்தார். தொடர்ந்து அசத்திய டில்லி அணியினர்,
பெங்கால் வீரர்களை இரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 21-15 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பெங்கால் வீரர்கள், டில்லி அணியினரை மூன்று முறை 'ஆல்-அவுட்' செய்து பதிலடி கொடுத்தனர். மொத்தம் 30 புள்ளி பெற்ற பெங்கால் அணி, ஆட்டநேர முடிவில் 45-38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.