Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்

செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்

செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்


ADDED : ஏப் 17, 2025 10:26 PM

Follow on Google

ADDED : ஏப் 17, 2025 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.

நேற்று நான்காவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனை ஹம்பி, ரஷ்யாவின் போலினாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, போட்டியின் 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திவ்யா, ஜார்ஜியாவின் சலோமி மெலியாவை எதிர்கொண்டார். திவ்யா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.

நீண்ட போராட்டத்துக்குப் பின், 77 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார். இந்திய வீராங்கனைகள் ஹரிகா, வைஷாலி மோதிய போட்டி 'டிரா' ஆனது.

நான்கு சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (3.5) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஹம்பி (3.0), திவ்யா (3.0), ஹரிகா (2.0) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். வைஷாலி (1.5) 7 வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us