/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெற்றி மகிழ்ச்சியில் வைஷாலி
/
வெற்றி மகிழ்ச்சியில் வைஷாலி
ADDED : செப் 16, 2025 10:47 PM

சமர்கந்த்: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து இரு முறை கோப்பை வென்ற மகிழ்ச்சியில் உள்ளார் வைஷாலி.
உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடந்தது. பெண்கள் 56 பேர் பங்கேற்றனர். 11 சுற்றில் 8.0 புள்ளி பெற்ற இந்தியாவின் வைஷாலி, இத்தொடரில் தொடர்ந்து இருமுறை கோப்பை வென்ற முதல் வீராங்கனை என சாதனை படைத்தார்.
தவிர, திவ்யா, ஹம்பியுடன் இணைந்து, உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான, 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற, மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார்.
இதுகுறித்து வைஷாலி கூறியது:
கடந்த 2023ல் கிராண்ட் சுவிஸ் தொடரில் சாதித்தது சரியான நேரத்தில் நடந்தது. ஏனெனில் செஸ் அரங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடாமல் இருந்தேன். மறுபடியும் இந்த ஆண்டு சரியாக விளையாடவில்லை. வெற்றிக்காக கடினமாக முயற்சித்தேன். ஆனால் முடிவுகள் எனக்கு சாதகமாக அமையவில்லை.
கடந்த இரு ஆண்டில் பல்வேறு கடினமான தொடர்களில் பங்கேற்று அதிக அனுபவம் பெற்றேன். 2024 கேண்டிடேட்ஸ் தொடரில் தொடர்ந்து 4 போட்டியில் தோற்றேன். கடைசியாக சென்னை சாலஞ்சர் தொடரில், ஒரு வாரம் முழுவதும், 7 போட்டிகளில் தோற்றேன். இதுபோன்ற போட்டிகள் என்னை சிறந்த, வலிமையான வீராங்கனையாக தற்போது மாற்றியுள்ளது.
தற்போது, மறுபடியும் கிராண்ட் சுவிஸ் தொடரில் கோப்பை வென்றது, எனது செஸ் வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.