/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'ரவுண்ட்-16' சுற்றில் யுவன்டஸ் * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
/
'ரவுண்ட்-16' சுற்றில் யுவன்டஸ் * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
'ரவுண்ட்-16' சுற்றில் யுவன்டஸ் * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
'ரவுண்ட்-16' சுற்றில் யுவன்டஸ் * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
ADDED : ஜூன் 23, 2025 11:44 PM

பிளடெல்பியா: கிளப் உலக கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்ட்-16' சுற்றுக்கு யுவன்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் முன்னேறின.
அமெரிக்காவில், கிளப் அணிகள் (32) பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது.
பிளடெல்பியாவில் நடந்த 'ஜி' பிரிவு லீக் போட்டியில் யுவன்டஸ் (இத்தாலி), வைதத் (மொராக்கோ) அணிகள் மோதின. இதில் யுவன்டஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யுவன்டஸ் அணிக்கு கெனான் (16, 69 வது நிமிடம்) 2 கோல் அடித்தார். பவுடவுய்ல் (6) 'சேம் சைடு' கோல் அடிக்க, விளகோவிச் (90+4) ஒரு கோல் அடித்தார். வைதத் அணிக்கு லார்ச் (25) ஆறுதல் தந்தார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 6-0 என அல் அய்ன் அணியை சாய்த்தது. யுவன்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள், தலா 2 வெற்றியுடன் 'ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறின.
'எச்' பிரிவு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, 3-1 என பச்சுவா அணியை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த ரெட் புல், அல் ஹிலால் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' (0-0) ஆனது.