/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
/
கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
ADDED : ஜூன் 19, 2025 10:58 PM

டர்சன்ஜோடா: தஜிகிஸ்தான் சென்றுள்ள இந்திய இளம் கால்பந்து அணி (23 வயதுக்குட்பட்ட) 2 நட்பு போட்டியில் பங்கேற்கிறது. போட்டியின் 33வது நிமிடத்தில் இந்திய வீரர் சுஹைல் அகமது ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தஜிகிஸ்தான் வீரர் அன்சோர் (59 வது) கோல் அடித்தார்.
85வது நிமிடத்தில் இந்தியாவின் பிரதிப் சுந்தர் ஒரு கோல் அடித்தார். போட்டி முடிய 5 நிமிடம் இருந்த போது இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. இதன் பின் திடீரென அசத்திய தாய்லாந்து அணிக்கு தவ்லத்டோவ் (90+1), அஜிஸ்போயவ் (90+5) என இருவரும் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அடுத்து ஜூன் 21ல் இந்திய அணி, கிர்கிஸ் குடியரசுடன் மோத உள்ளது.