/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக பாரா பவர்லிப்டிங்கில்
/
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக பாரா பவர்லிப்டிங்கில்
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக பாரா பவர்லிப்டிங்கில்
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக பாரா பவர்லிப்டிங்கில்
ADDED : ஜூன் 22, 2025 08:44 PM

பீஜிங்: பாரா பவர்லிப்டிங் உலக கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தது.
சீனாவின் பீஜிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் அதிகபட்சமாக 153 கிலோ துாக்கிய இந்தியாவின் குல்பாம் அகமது வெண்கலம் வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.
ஆண்களுக்கான 72 கிலோ பிரிவில், 156 கிலோ துாக்கிய இந்தியாவின் ராமுபாய் பம்பாவா வெண்கலம் கைப்பற்றினார். ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் அதிகபட்சமாக 150 கிலோ துாக்கிய இந்தியாவின் ஜோபி மாத்யூ தங்கத்தை தட்டிச் சென்றார்.
முதல் நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தது.