sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் 'சாம்பியன்'

/

ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் 'சாம்பியன்'

ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் 'சாம்பியன்'

ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் 'சாம்பியன்'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. மொத்தம் 12 பேர், 'ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் மோதினர். முடிவில் 'டாப்-4' இடம் பிடித்த வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர். முதல் அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 1.5 - 0.5 என, ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லரை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 1.5 - 0.5 என, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சியை வென்றார்.

பைனலில் அர்ஜுன் 22, ஆனந்த் 55, மோதினர். இதன் முதலிரண்டு சுற்று 'டிரா' ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு 'டை பிரேக்கர்' முறைக்கு சென்றது. இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டி 'டிரா' ஆனது.

முடிவில் அர்ஜுன் 2.5 - 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.




    • Dinamalar Events


    Dinamalar