/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
அரையிறுதியில் இந்திய ஜோடி * ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
அரையிறுதியில் இந்திய ஜோடி * ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
ADDED : ஜூன் 24, 2025 10:37 PM

ஜோஹர்: ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையரில் நடப்பு சாம்பியன், இந்தியாவின் அபே சிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி, காலிறுதியில் தென் கொரியாவின் மின்வு லீ, யூயங் நா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 10-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-3 என எளிதாக கைப்பற்றியது. மூன்றாவது செட்டிலும் 11-5 என ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 2-1 என் செட் கணக்கில் வெற்றி பெற்ற, அரையிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-2' ஜோடி, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் ஜோடி, பிலிப்பைன்சின் ஜெமிகா, அலிசா ஜோடியை சந்தித்தது.
இதன் முதல் செட்டை 11-6 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-3 என எளிதாக கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 2-0 என்ற நேர் செட்டில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.