/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
ADDED : மார் 27, 2025 10:23 PM

சென்னை: ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் தமிழக வீரர் சரத் கமல் வெற்றி பெற்றார். மற்றொரு தமிழக வீரர் சத்யன் தோல்வியடைந்தார்.
சென்னையில், டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், பயாஸ் ஜெயின் மோதினர். இதில் ஏமாற்றிய சத்யன் 1-3 (8-11, 11-2, 8-11, 3-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், அனிர்பன் கோஷ் மோதினர். சரத் 3-0 (11-7, 11-9, 12-10) என வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மானுஷ் ஷா 3-1 (11-13, 12-10, 13-11, 11-6) என இத்தாலியின் ஜான் ஓய்போட்டை வீழ்த்தினார். இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 3-0 (12-10, 11-5, 11-5) என மால்டாவின் கிம் டேஹ்யுனை தோற்கடித்தார். இந்தியாவின் மானவ் தாக்கர் 3-0 (11-4, 11-7, 11-7) என சகவீரர் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 3-2 (11-9, 7-11, 11-8, 8-11, 12-10) என, சகவீராங்கனை சுதிர்தா முகர்ஜியை போராடி வென்றார். இந்தியாவின் காவ்யா பாட் 3-1 (11-8, 8-11, 11-6, 11-6) என ஹாங்காங்கின் ஹோய் டங் வோங்கை தோற்கடித்தார். இந்தியாவின் தியா 3-1 (8-11, 11-9, 11-9, 11-4) என சகவீராங்கனை கரிமாவை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையர் 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஸ்வஸ்திகா கோஷ் ஜோடி 3-1 (11-7, 11-13, 11-7, 12-10) என சகநாட்டை சேர்ந்த சுதிர்தா, அய்ஹிகா முகர்ஜி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் - ஸ்ரீஜா அகுலா, மானவ் தாக்கர் - மணிகா பத்ரா, அனிர்பன் - ஸ்வஸ்திகா கோஷ், ஹர்மீத் தேசாய் - யாஷஸ்வினி ஜோடிகள் தோல்வியடைந்தன. இந்தியாவின் மானுஷ் ஷா, தியா ஜோடி 3-0 (11-4, 12-10, 11-7) என சகநாட்டை சேர்ந்த அங்கூர், அய்ஹிகா ஜோடியை வீழ்த்தியது.