sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: அன்டிம் ஏமாற்றம்

/

மல்யுத்தம்: அன்டிம் ஏமாற்றம்

மல்யுத்தம்: அன்டிம் ஏமாற்றம்

மல்யுத்தம்: அன்டிம் ஏமாற்றம்


ADDED : செப் 17, 2025 10:34 PM

Google News

ADDED : செப் 17, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாக்ரெப்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் அன்டிம் பங்கல் தோல்வியடைந்தார்.

குரோஷியாவின் ஜாக்ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டிகள் நடக்கின்றன. 53 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அன்டிம் பங்கல், 10-0 என ஸ்பெயினின் கார்லா சோலரை வீழ்த்தினார். காலிறுதியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற சீனாவின் ஜங் ஜின்னை சந்தித்தார். இதில் 9-8 என 'திரில்' வெற்றி பெற்ற அன்டிம், அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் 3-5 என ஈகுவடாரின் லுாசியாவிடம் தோல்வியடைந்தார்.

வருமா வெண்கலம்

76 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் பங்கேற்றார். நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களமிறங்கினார் பிரியா. இதில் 2-4 என ஈகுவடாரின் ரியாஸ்கோவிடம் வீழ்ந்தார். அடுத்தடுத்து வெற்றி பெற்ற ரியாஸ்கோ பைனலுக்கு முன்னேறினார்.

இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' வாய்ப்பு பிரியாவுக்கு கிடைத்தது. இதன் முதல் போட்டியில் பிரியா 4-0 என இத்தாலியின் என்ரிகாவை வென்றார். அடுத்து கியூபாகிவின் மிலைமியை சந்திக்க உள்ளார். இதில் வென்றால் வெண்கலம் கைப்பற்றலாம்.

இந்தியாவின் மணிஷா (62), 2-1 என வெனிசுலாவின் ஆஸ்ட்ரிட்டை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் வடகொரியாவின் ஜு கிம்மிடம் 0-8 என தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் ராதிகா (68), ஜோதி (72) முதல் போட்டியில் தோல்வியடைந்தனர்.






      Dinamalar
      Follow us