/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26.39 லட்சம் வாக்காளர்கள் 61,045 பேர் சேர்ப்பு; 34,401 பேர் நீக்கம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26.39 லட்சம் வாக்காளர்கள் 61,045 பேர் சேர்ப்பு; 34,401 பேர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26.39 லட்சம் வாக்காளர்கள் 61,045 பேர் சேர்ப்பு; 34,401 பேர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26.39 லட்சம் வாக்காளர்கள் 61,045 பேர் சேர்ப்பு; 34,401 பேர் நீக்கம்
ADDED : ஜன 23, 2024 05:34 AM

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்., 27ம் தேதி வெளியிடப்பட்டது. ஏழு சட்டசபை தொகுதிகளில், 13 லட்சத்து 6 ஆயிரத்து 774 ஆண்கள்; 13 லட்சத்து 31 ஆயிரத்து 950 பெண்கள், 456 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 26 லட்சத்து 39 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ளனர்.
தொடர்ந்து, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்தது. ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர்.
இதில், இறந்தவர்கள், வெளியிடங்களுக்கு சென்றவர்கள், ஒரே பெயரில், இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அட்டை வைத்திருப்போர் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
தொடர்ந்து, சிறப்பு சுருக்குமுறை திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, நேற்று கலெக்டர் ராகுல்நாத் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி பெற்றுக்கொண்டார். உடன், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த பட்டியலில், 28,784 ஆண்களும், 32,237 பெண்களும், 24 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 61,௦45 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, 17,181 ஆண்களும், 17,211 பெண்களும், 9 மூன்றம் பாலினத்தவர் என, 34,401 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 13 லட்சத்து 6 ஆயிரத்து 774 ஆண்கள்; 13 லட்சத்து 31 ஆயிரத்து 950 பெண்கள்; 456 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 26 லட்சத்து 39 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ளனர்.
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், அதிகபட்சமாக, 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக செய்யூர் சட்டசபை தனி தொகுதியில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 656 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய், தாசில்தார், நகராட்சி, பேரூராட்சி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து, இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
- ராகுல்நாத், கலெக்டர், செங்கல்பட்டு மாவட்டம்.

