/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் மோதி 35 ஆடுகள் உயிரிழப்பு
/
கார் மோதி 35 ஆடுகள் உயிரிழப்பு
ADDED : ஜன 13, 2024 10:16 PM
காஞ்சிபுரம்:மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சொந்தமான, 68 வெள்ளாடுகளை நேற்று, தண்டலம் கிராம வயல்வெளியில், மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.
நேற்று ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு, பள்ளூர்- - சோகண்டி சாலையோரத்தில் ஆடுகளை ஓட்டி சென்றார்.
அப்போது, பரந்துாரில் இருந்து, மதுரமங்கலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த, கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட, 'ஹூண்டாய் ஐ-20' கார், சாலையோரம் சென்ற ஆடுகள் மீது மோதியது.
இதில், 35 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காரை ஓட்டி சென்ற அம்ரூத், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

