/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூரில் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளை
/
திருக்கச்சூரில் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளை
திருக்கச்சூரில் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளை
திருக்கச்சூரில் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளை
ADDED : ஜூன் 23, 2025 11:42 PM

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் ஈஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன், 55.
இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 21ம் தேதி, தன் குடும்பத்துடன் கோயம்புத்துார் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
நேற்று காலை, முருகையன் மட்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது.
மேலும், போலீசிடம் சிக்காமல் இருக்க, வீடு முழுதும் மிளகாய்ப் பொடியை துாவிவிட்டுச் சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து முருகையன், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை அழைத்து, தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மறைமலை நகர் காவல் நிலைய சோதனைச்சாவடி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து 500 மீட்டர் துாரத்தில் உள்ள நிலையில், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.