/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.5.64 கோடியில் பணி தீவிரம்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.5.64 கோடியில் பணி தீவிரம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.5.64 கோடியில் பணி தீவிரம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.5.64 கோடியில் பணி தீவிரம்
ADDED : ஜன 13, 2024 10:16 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த நல்லாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட 1 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
புனித தோமையார்மலை வட்டத்தில், வேங்கைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, 1 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்.
அச்சிறுப்பாக்கம் வட்டாரத்தில், சிறுபேர் பாண்டி, சித்தாமூர் இந்தலுார், மதுராந்தகம் வட்டாரத்தில், முன்னுத்திக்குப்பம், மொறப்பாக்கம் ஆகிய பகுதியில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தலா, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், திருப்போரூர் வட்டாரத்தில், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், சதுரங்கப்பட்டினம்.
லத்துார் வட்டாரத்தில் பவுஞ்சூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகம் மற்றும் அலுவலகம் கட்ட, தலா 57 லட்சம் ரூபாய் என, 5 கோடியே 64 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளுக்கு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம், டெண்டர் விடப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

