/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முத்திகை நல்லான்குப்பத்தில் தெருக்கூத்து நடத்த மேடை
/
முத்திகை நல்லான்குப்பத்தில் தெருக்கூத்து நடத்த மேடை
முத்திகை நல்லான்குப்பத்தில் தெருக்கூத்து நடத்த மேடை
முத்திகை நல்லான்குப்பத்தில் தெருக்கூத்து நடத்த மேடை
ADDED : ஜன 19, 2024 01:16 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், முத்திகைநல்லான் குப்பம் பகுதி உள்ளது. இங்கு திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வசந்த உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.
உற்சவம், பிற திருவிழாக்கள் நடத்தும்போது, நாடக கலைஞர்கள், தெருக்கூத்து நடத்துவோர், புராண இதிகாச கூத்து நடத்த, நிரந்தர மேடை இன்றி சிரமப்பட்டனர். மேடை அமைக்க கோரியதால், பேரூராட்சி நிர்வாகம், தற்போது கூத்துமேடை அமைத்துள்ளது.
இதுகுறித்து, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் கூறியதாவது:
திருக்கழுக்குன்றத்தில், முத்திகைநல்லான் குப்பம் பகுதியினர், கூத்துமேடை அமைக்க, வலியுறுத்தினர்.
பேரூராட்சி பொதுநிதியில் இருந்து, 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட்டில் கூத்துமேடை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.