/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் பறிப்பு வழக்கில் தலைமறைவு நபர் கைது
/
மொபைல் பறிப்பு வழக்கில் தலைமறைவு நபர் கைது
ADDED : ஜன 24, 2024 01:03 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில், சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த மாதம் 10ம் தேதி இரவு, வட மாநில இளைஞர்கள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், மூன்று மொபைல் போன்கள், 20,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 30ம் தேதி, பெருந்தண்டலம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

