/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வால்வீச்சு விளையாட்டு பயிற்சிக்கு திருப்போரூரில் களம் அமைக்க ஏற்பாடு
/
வால்வீச்சு விளையாட்டு பயிற்சிக்கு திருப்போரூரில் களம் அமைக்க ஏற்பாடு
வால்வீச்சு விளையாட்டு பயிற்சிக்கு திருப்போரூரில் களம் அமைக்க ஏற்பாடு
வால்வீச்சு விளையாட்டு பயிற்சிக்கு திருப்போரூரில் களம் அமைக்க ஏற்பாடு
ADDED : ஜன 23, 2024 05:35 AM
திருப்போரூர் : வண்டலுார் அருகே மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், வால்வீச்சு போட்டியில், கன்னியாகுமரியை சேர்ந்த ஆர்லின் என்பவர் தங்கப் பதக்கம் வென்றார். திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, ஆர்லினுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பின், எம்.எல்.ஏ., பாலாஜி கூறியதாவது:
இந்திய நாட்டில் விளையாட்டுத் துறை மேம்பாட்டை ஒன்றிய அரசு முன்னெடுத்து, கேலோ இந்தியா என்கிற விளையாட்டு போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றக்கூடியோரில் பலர், இந்த பென்சிங் விளையாட்டிலே பதக்கங்கள் பெற்றவர்களாக உள்ளனர்.
தமிழக அரசு, இந்த விளையாட்டு போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவமும், கவனமும் அளிக்க வேண்டும் என்பதை, இந்த நேரத்தில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்.
திருப்போரூர் சட்ட சபை தொகுதியில், பென்சிங் விளையாட்டுக்கென்று ஒரு சிறப்பான பயிற்சி களம் அமைப்பதுகுறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடமும், கலெக்டரிடமும் பேசி இருக்கிறேன். விரைவில், அதை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

