/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
/
திருப்போரூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
திருப்போரூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
திருப்போரூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
ADDED : ஜூன் 25, 2025 02:17 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக, தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்போரூர், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி திருப்போரூர் பேருந்து நிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.
அதே நேரத்தில், பாலுாட்டும் தாய்மார்களும் பணி மற்றும் பயணம் நிமித்தமாக பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருக்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக இங்கு, தாய்மார்கள் பாலுாட்டும் தனி அறை இருந்தது. ஆனால், இந்த அறை பழுதடைந்து இருந்ததால், புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சி சார்பில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக, தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.