/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருநாய்களுக்கு பாலியல் சீண்டல் வாலிபர் மீது வழக்கு
/
தெருநாய்களுக்கு பாலியல் சீண்டல் வாலிபர் மீது வழக்கு
தெருநாய்களுக்கு பாலியல் சீண்டல் வாலிபர் மீது வழக்கு
தெருநாய்களுக்கு பாலியல் சீண்டல் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2025 10:57 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தெருநாய்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்கு பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு, அண்ணா சாலையோரம் சுற்றித்திரியும் தெருநாய்களை, இரவு நேரங்களில் வாலிபர் ஒருவர் பிடித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், கடந்தாண்டு ஜூன் 23ம் தேதி புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன்,30, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர், செங்கல்பட்டில் உள்ள மெத்தை தயாரிக்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.