ADDED : ஜன 13, 2024 10:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு, மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாமை துவக்கியுள்ளது.
இதில், வருவாய், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம், மின்சார வாரியம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு மையங்களிலும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
இந்த முகாமில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஊராட்சி தலைவர் தாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

