/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காத்தங்கடை பழைய இ.சி.ஆரில் மழைநீர் வடிகால்வாயால் சர்ச்சை
/
காத்தங்கடை பழைய இ.சி.ஆரில் மழைநீர் வடிகால்வாயால் சர்ச்சை
காத்தங்கடை பழைய இ.சி.ஆரில் மழைநீர் வடிகால்வாயால் சர்ச்சை
காத்தங்கடை பழைய இ.சி.ஆரில் மழைநீர் வடிகால்வாயால் சர்ச்சை
ADDED : ஜன 23, 2024 05:27 AM

கட லுார் : கூவத்துார் அடுத்த கடலுார் பகுதியில் உள்ள மதுராந்தகம் சாலை, 5.5 மீ., அகல குறுகிய சாலையாக முன்பு இருந்தது.
தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், ௭ மீட்டர் அகலத்திற்கு சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.
அதன் ஒரு பகுதியாக, காத்தங்கடை சந்திப்பிலிருந்து கடலுார் நோக்கிச் செல்லும் சாலையின் இருபுறமும், 400 மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்காத அப்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அவசியமின்றி வடிகால்வாயை அமைக்கப்பட்டு வருவதாக, ஏற்கனவே சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், பழைய கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், தற்போது அவசியமின்றி வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
காத்தங்கடையில், கடலுார் செல்லும் சாலையிலும், பழைய இ.சி.ஆர். சாலையிலும், எப்போதுமே மழைநீர் தேங்கியதில்லை. புதிதாக அமைக்கும் புதுச்சேரி சாலையும், பழைய இ.சி.ஆர்.க்கு, 600 மீ., கிழக்கில் தான் அமைக்கப்படுகிறது.
இது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பழைய இ.சி.ஆர். சாலை பகுதியில், மழைநீர் வடிகால்வாயை அவசியமின்றி கட்டி, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.
அவசியமே இல்லாத இடத்தில் கால்வாய்க்கு திட்டமிட்டது, அவர்களுக்கே வெளிச்சம். மழைநீர் தேங்கி, வடிய முடியாத வேறிடத்தில் அதை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

