/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி
/
மின்கசிவால் தீ விபத்து மூதாட்டி பலி
ADDED : ஜன 23, 2024 04:50 AM

சூணாம்பேடு : சூணாம்பேடு காலனி, அருணாச்சலபுரம் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பூபதி, 74. இவர், குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ௯:௩௦ மணிக்கு, வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த போது, வீட்டில் இருந்த ரேடியோவில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை தீப்பற்றி எரிந்தது.
குடிசை தீப்பற்றி எரிவதை கண்ட உறவினர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உள்ளே சென்று பார்த்தபோது, வயது முதிர்வு காரணமாக வெளியே வர முடியாமல், தீ விபத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற சூணாம்பேடு போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

