/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கசிவால் தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்
/
மின்கசிவால் தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்
ADDED : ஜன 24, 2024 12:59 AM

செய்யூர்:செய்யூர் அருகே வடக்கு செய்யூர் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் இருசன், 70. விவசாயி. குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, இரவு வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்து போது, வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, குடிசையில் தீப்பற்றி எரியத் துவங்கி உள்ளது.
இதையறிந்த இருசன் மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டின் வெளியே வந்து, வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கட்டுங்கடங்காமல் பற்றி எரிந்த தீ, முழுதும் பரவி குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து கருகின.
இந்த தீ விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

