/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மது அருந்துவதை கண்டித்ததால் கணவர் தற்கொலை
/
மது அருந்துவதை கண்டித்ததால் கணவர் தற்கொலை
ADDED : ஜன 19, 2024 01:10 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, பழத்தோட்டம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 45. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நாராயணமூர்த்தி, சில நாட்களாக மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதன் காரணமாக கணவர் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதில் மனமுடைந்த நாராயணமூர்த்தி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு கொண்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நாராயணமூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

