/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.98.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கேளம்பாக்கத்தில் துவக்கிவைப்பு
/
ரூ.98.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கேளம்பாக்கத்தில் துவக்கிவைப்பு
ரூ.98.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கேளம்பாக்கத்தில் துவக்கிவைப்பு
ரூ.98.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கேளம்பாக்கத்தில் துவக்கிவைப்பு
ADDED : ஜன 21, 2024 05:37 AM
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில், தமிழ் அன்னை சமுதாய நலக்கூடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிப்பு பணிகள் துவங்கி நிறைவடைந்தன.
சாத்தங்குப்பம் சாவடிகுளத்தை சுற்றி, 15 லட்சம் மதிப்பில் நடைபயிற்சி பூங்கா வசதியுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
சாத்தங்குப்பம் பகுதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ்., நகரில் 30,௦௦௦ லிட்டர் கொள்ளளவில் 17.5 லட்சம் மதிப்பிலும், நந்தனம் நகரில் 60,௦௦௦ லிட்டர் கொள்ளளவில் 27 லட்சம் மதிப்பிலும், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளன.
சமுதாய கூடம், சாவடிகுளம் நடைபயிற்சி பூங்கா, மகளிர் கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில், ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, முடிவடைந்த வளர்ச்சி பணிகளை திறந்து வைத்தும், நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்தும் பணிகளை துவக்கி வைத்தார்.

