/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 19 பேருக்கு கடன் உதவி வழங்கல்
/
செங்கையில் 19 பேருக்கு கடன் உதவி வழங்கல்
ADDED : பிப் 23, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கடன் வசதியாக்கல் முகாம், நேற்று நடந்தது.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று, 19 பேர் தொழில் துவங்க, 5 கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்து 800 ரூபாய் கடன் உதவியை வழங்கினர்.
மேலும், அம்பேத்கர் தொழில் முன்னோடி கடன் மானியமாக, 1 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

