/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் திரியும் கால்நடைகள் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
/
சாலையில் திரியும் கால்நடைகள் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சாலையில் திரியும் கால்நடைகள் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சாலையில் திரியும் கால்நடைகள் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
ADDED : பிப் 01, 2024 10:41 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருக்கச்சூர்- -மறைமலை நகர் சாலை மற்றும் முக்கிய பஜார் வீதிகளில், கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
இரவில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சமீபத்தில், திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மாடு முட்டி படுகாயமடைந்தார்.
நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைமலை நகர் நகராட்சியில், பொது இடங்கள் மற்றும் பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக, பொதுமக்கள், காவல் துறை மற்றும் பத்திரிகை செய்தி மூலம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, சமீபத்தில் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, வரும் 5ம் தேதி முதல், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள், முறைப்படி பிடித்து அருகில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும்.
எனவே, உரிமையாளர்கள் மாடுகளை தங்களுக்கு பாத்தியப்பட்ட இடங்களில் பராமரிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

