ADDED : ஜன 21, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: வேங்கடமங்கலம் ஊராட்சி அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர் அன்பரசு, 27, கொலை வழக்கில், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, 23, உள்ளிட்டோரை, காயார் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
அதில், ஏற்கனவே இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரையின் படி பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்

